1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (13:14 IST)

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்

குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் யார் எவ்வளவு குடிநீரை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் வதந்தி பரப்புவார்கள் என்றும் ஆனால் குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை தான் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் 
 
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிக அளவில் தண்ணீர் செலவு செய்யும் பணக்காரர்கள் தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார் தற்போது குடிநீர் தற்போது மாநகராட்சி குடிநீர் கட்டணத்தை அனைவருக்கும் சமமாக பெற்று வரும் நிலையில் மீட்டர் பொருத்தினால் ஒவ்வொருவர் ஒவ்வொருவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை உள்பட தமிழகத்தில் குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்