1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no tollgate charges for tuticorin vehicles

நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் இல்லை: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது தான் மீண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூன்று சுங்க சாவடிகளிலும் இன்று 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சுங்க கட்டணங்களுக்கு விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை.. ஏசு பிறந்த பெத்லகேமில் மட்டும் சோகம்..!