வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:07 IST)

சென்னை முதல் தூத்துக்குடி வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

தமிழகத்தில் சென்னை முதல் தூத்துக்குடி வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட நான்கு வட மாவட்டங்களிலும் நெல்லை, தூத்துக்குடி உள்பட ஒரு சில தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது தான் சில நாட்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில் சென்னை முதல் தூத்துக்குடி வரை உள்ள கடலூர் மாவட்டங்களில் இன்று 10 முதல் 20 மில்லி மீட்டர் மழை பெயும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 
 
ஆனால் அதே நேரத்தில் மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் கனமழை மற்றும் அதிக கன மழை இப்போது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடிக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva