1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Famous kabaddi players house collapses in flood

பிரபல கபடி வீரரின் வீடு வெள்ளத்தில் இடிந்ததால் பரபரப்பு.....

tamil thalaivas kabadi player
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

சமீபத்தில் தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தெங்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துரிதமாக உதவி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி பெருவெள்ளத்தில் முத்தையாபுரத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் கபடி அணி வீரர் மாசானமுத்துவின் வீடு முழுமையான இடிந்துள்ளது.

அதில், அவரது விளையாட்டு சான்றிதழ்கள், பெற்றோரின், அடையாள அட்டைகள், உள்ளிட்ட அனைதிதும் நீரில் மூழ்கியுள்ளன.

புரோ கபடி லீக்கில் தற்போது மாசானமுத்து விளையாடி வரும் நிலையில் அவர் வீட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் விளையாட்டில் கவனம் செலுத்தும்படி தொலைபேசி மூலம்  கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
தென் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதை உறுதி செய்வோம்: முதல்வர் ஸ்டாலின்