1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:24 IST)

சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இல்லை: சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சிஐஏ சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சிஐடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை முதல்வர் சந்திக்க செல்லாதது ஏன் என சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய முகஸ்டாலின் ’குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் 
 
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால் சிஏஏ சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்தபோது ’சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தில் அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தியதாகவும் பேருந்துகள் மீதும் காவலர்கள் மீது கல் மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதாகவும் கூறினார். மேலும் வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் சிஏஏ சட்டத்தின் சட்டம் குறித்து காரசாரமாக விவாதம் நடத்தியதால் இன்றைய சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது