ஒவ்வொரு தமிழரின் மீதும் ரூ 57,000 கடன் இருக்கிறது – பட்ஜெட்டை விமர்சித்த ஸ்டாலின் !

Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (08:07 IST)

தமிழக அரசின்
கடன் சுமார் 4.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், நேற்று சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.இதில் பல அறிவிப்புகள் வெளியானாலும் அரசின் வருவாயை அதிகரிக்கும் வண்ணம் எந்த அறிவிப்புகளும் இல்லை என அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின், ‘2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழக அரசின் கடன் ஒரு கோடி ரூபாய்தான். ஆனால் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்போது 4.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நமக்கே தெரியாமல் நம் ஒவ்வொருவர் தலையிலும் 57,000 ரூபாய் கடன் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :