செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (20:08 IST)

எடப்பாடி அரசின் 3 ஆண்டு ஆட்சி – சைலண்ட் மோடில் பாஜக !

எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து கூட்டணிக் கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற போது அவர் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் பதவியேற்று 3 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கூட்டணிக் கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான பாஜக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.