வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்: டிடிவி தினகரன் விமர்சனம்!

dinakaran
Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (15:38 IST)
காற்றில் வரைந்த ஓவியம் போல செயல் திட்டமில்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட் இது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 
 
தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டப்பேரவையில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.
 
இந்நிலையில் ‘காற்றில் வரைந்த ஓவியம்’ போல செயல் திட்டமில்லாத வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட். தமிழகத்தை கடனில் தத்தளிக்க வைத்திருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையையே காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார் அமமுக பொதுச்சியலாளர் டிடிவி தினகரன். 
 
இதேபோல திமுக தலைவர் முக ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலில் 196 நிமிடங்கள் பேசினார். அவரை பொறுத்தவரை இது 10 ஆவது பட்ஜெட், ஆனால் இது  எதற்கும் பத்தாத பட்ஜெட் என விமர்சித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :