திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (15:15 IST)

நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது- டிடிவி. தினகரன்

dinakaran
சென்னை மடிப்பாக்கம் அருகேயுள்ள நங்கநல்லூரில் உள்ள ஒரு கோயில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து,விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டியில் விவசாய தோட்டத் பண்ணைத் தொட்டியில், 6 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் நீர் நிலைகளில் மூழ்கி இளைஞர்கள் சிறுவர்கள் பலியானது பற்றி அமமுக பொ.செ., டிடிவி.தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன.

மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், சிறிய நீர் நிலைகளில் அந்தந்த கிராமங்களில் குழுக்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். (3/4)

நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்’’என்று தெரிவித்துள்ளார்