வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (16:16 IST)

சிங்காரச் சென்னை அட்டை: வங்கிக்கணக்கு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் சிங்காரச் சென்னை அட்டை மூலம் வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம்மில் பலம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் பாரத் ஸ்டேட் வங்கி ஆகியவை இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற டெபிட் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த அட்டை மூலம் சென்னை மெட்ரோ ரயில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் எடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
மேலும் சுங்கச்சாவடி, வாகன நிறுத்தமிடம், ஸ்மார்ட் சிட்டி, சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் பணம் செலுத்த இந்த அட்டையை பயன்படுத்தலாம். இந்த அட்டை மூலம் வங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும்
 
தினசரி ரூ.50,000 வரை இந்த அட்டை மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, சென்ட்ரல், உயர்நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி ஆகிய மெட்ரோ நிலையங்களில் இந்த அட்டையை மூன்றே நிமிடத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அட்டையை ரீசார்ஜ் செய்ய https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl என்ற வலைதளம் சென்று ரீசார்ஜ் செய்து கொள்வதோடு இருப்புத் தொகையை தெரிந்துகொள்ளலாம். வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அட்டை குறித்த தகவலை தெரிந்து கொள்ள https://chennaimetrorail.org/singara-chennai-card/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
 
Edited by Mahendran