திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (19:58 IST)

நடுத்தெருவில் நிற்கின்றேன்: பொன் மாணிக்கவேல் புகாரால் பரபரப்பு

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. ஆனால் அவருக்கு மற்ற அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததோடு அவர் மீது குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகம் இல்லை என்றும், எங்களுக்கென அலுவலகம் இல்லாததால் நாங்கள் நடுத்தெருவில் இருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல அரசு செயல்படுவதால் தலைமை செயலாளரை ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், அரசு துறையை அரசே முடக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, பொன் மாணிக்கவேலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்தனர். மேலும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கை ஜனவரி 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்