1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Journalist Mani's Explosive Statement: 2026 Election Will Be a Corrupt Battle

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

தேர்தல்
2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் கேடுகெட்ட தேர்தலாக இருக்கும் என்றும், இங்கே மாநில அரசும், மேலே மத்திய அரசும் எந்த எல்லைக்கும் போவார்கள் என்றும், பணம் தண்ணீர் போல் விளையாடும் என்றும் பத்திரிகையாளர் மணி அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக கூட்டணி என்ற தேன்கூட்டை ஸ்டாலின் உடைக்க மாட்டார் என்று நம்புகிறேன் என்றும், அதையும் மீறி அவர் பாமகவை உள்ளே கொண்டு வந்தால், கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியே போகும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தேமுதிக பொருத்தவரை, அதிமுக கூட்டணியை தவிர வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
விஜய்யின் ஆட்டம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்றும், ஒருவேளை அவர் ஏதாவது புத்திசாலித்தனமாக செய்து மக்கள் ஆதரவை பெற முயன்றால், திமுக மற்றும் பாஜக மறைமுகமாக கூட்டணி சேர்ந்து விஜய்யை அழிக்க முயற்சிக்கும் என்றும், இங்கே மாநில அரசு, அங்கே மத்திய அரசு கூட்டணி சேர்ந்து விஜய்யை ஒழித்து கட்ட பல திட்டங்கள் போடுவார்கள் என்றும், அதனால் தான் வரும் தேர்தலை  நான் கேடுகெட்ட தேர்தலாக இருக்கும் என்று கூறினேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு