வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:00 IST)

அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் சரியா? கமல்ஹாசனின் அதிரடி பதில்

மேகதாது அணை பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு அதிமுகவை அடிக்கடி விமர்சனம் செய்யும் கட்சிகளே கண்டனம் செய்துள்ள நிலையில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நல்லதுதான் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடங்கியதில் இருந்தே மக்களவையிலும் மாநிலங்களவையிலும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஆகியோர் அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறிய கமல்ஹாசன், 'அதிமுக எம்பிக்களின் இடைநீக்கம் சரியான நடவ்டிக்கைதான் என்று தெரிவித்தார். முன்னதாக இந்த இடைநீக்கம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.