ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (13:08 IST)

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பிற்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட் அளித்த பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது  

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகளை மீட்டு திரும்ப கொண்டு வந்த நிலையில் திடீரென சிலை திருட்டு வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. ஆனால் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் இந்த வழக்குகளை பொன். மாணிக்கவேல் அவர்களே விசாரிப்பார் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையிலும் அவர் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது இந்த மனுவை சற்றுமுன் விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அசோக் பூசன், நாகேஸ்வரராவ் அமர்வு பொன் மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.