1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain with Thunderstorms Expected in 18 Districts Including Chennai, Says Weather Department

சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

மழை
இன்று சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரையிலும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளட்க்ய்,
 
மேற்கண்ட 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி