திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (18:42 IST)

அதிமுக, திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்: காரணம் என்ன தெரியுமா?

மக்களவையில் சபாநாயகர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவை சேர்ந்த 24 எம்.பி.க்கள் 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். அதேபோல் மாநிலங்களவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் இன்று காலை பாராளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக எம்.பிக்களை அமைதி காக்குமாறு மக்களவையில் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் வெங்கய்யா நாயுடு அவர்களும் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அதேபோல் மாநிலங்களவையில் திமுக எம்பிக்களும், இதே பிரச்சனைக்காக அமளி செய்தனர். இதனையடுத்து திமுக, அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.