புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 மே 2025 (17:41 IST)

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

kamal seeman
தக்லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்று உரையாற்றியதால் கர்நாடகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனின் கருத்துக்குத் தன்னுடைய  ஆதரவை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமல் சொன்னது எந்த அளவிலும் தவறில்லை. தமிழ் மொழியிலிருந்து பிறந்ததுதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகள். வரலாற்றை அறியாமல் பேசுபவர்களால் உண்மை மறைக்க முடியாது” என்றார்.
 
மேலும், “கலைஞர்களின் கௌரவம் காக்கப்பட வேண்டும். உண்மையை பேசும் போது எதிர்ப்பு வந்து தான் விடும். அதற்காக பதாகை கிழிக்கிறோம் என்றால், அது அவர்கள் அறியாமையின் விளைவே” என சுட்டிக்காட்டினார்.
 
கர்நாடகத்தில் சில இடங்களில் ‘தக்லைஃப்’ படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்படுவதற்கும் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
 
 
 Edited by Mahendran