தெருவில் கிடந்த வாக்கு இயந்திரம் – அதிகாரிகள் சஸ்பெண்ட்
நேற்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் தொகுதி ஒன்றில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரம் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடந்த இந்த தேர்தலில் மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். ஆனால் இப்போது ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் உள்ள கிஷன்கஞ்ச் தொகுதி சட்டமன்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.