நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை! மாவட்ட நிர்வாகம்..!
நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஊட்டி கொடைக்கானலுக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஊட்டி கொடைக்கானல் செல்வதற்கு முறையான சாலைகள் மேம்பாலங்கள் இல்லை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இதனை அடுத்து நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு செல்வோர் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி இ-பாஸ் முறை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பெற்று தான் ஊட்டி கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையில் நீலகிரி மாவட்ட பதிவில் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
வெளிமாவட்ட வாகனங்கள் மட்டுமே உரிய ஆவணங்கள் கொடுத்து இ-பாஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran