1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (08:24 IST)

முன்கூட்டியே கொடைக்கானலில் இருந்து கிளம்பும் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

Stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவர் திட்டமிட்டபடி கிளம்பாமல் முன்கூட்டியே சென்னை திரும்ப விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 29ஆம் தேதி கொடைக்கானல் சென்று இருந்த நிலையில் அவர் மே நான்காம் தேதி அதாவது நாளை சென்னை திருப்புவார் என்று கூறப்பட்டிருந்தது

ஆனால் முன்கூட்டியே இன்றே முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப இருப்பதாகவும் இந்த திடீர் பயணம் மாற்றம் ஏன் என்று தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தேர்தலுக்குப் பின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றம் காரணமாகத்தான் முதல்வர் முன்கூட்டியே சென்னை திருப்புவதாக கூறப்படுகிறது

அதுமட்டுமின்றி சில சீனியர் தலைவர்கள் தேர்தல் களப்பணியில் சரியாக செயல்படவில்லை என்று தகவல் வெளியானதை அடுத்து இது குறித்து விசாரணை செய்யவும் முதல்வர் திருப்புவதாக கூறப்படுகிறது

Edited by Siva