திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (19:21 IST)

கொடைக்கானல் செல்லும் முன் முதல்வர் கொடுத்த இரண்டு அறிவுரைகள்.. என்னென்ன தெரியுமா?

Stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தனது குடும்பத்துடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் சென்ற நிலையில் அதற்கு முந்தைய நாள் கோட்டைக்கு சென்று சில முக்கிய ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கிறதா? அதேபோல் மின்தடை ஏற்படாமல் கோடையை சமாளிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சில அறிவுரைகளையும் கூறிவிட்டு தான் முதல்வர் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி என்பதால் கோட்டைக்கு சென்று விட்டு வந்தால் நல்லது என தலைமைக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்தியதை அடுத்து அவர் கோட்டைக்கு சென்றதாகவும் சில ஆலோசனை கூட்டங்களையும் நடத்திவிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து முதல்வர் மே ஐந்தாம் தேதி சென்னை திரும்ப இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran