ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ்.. வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கிறது தமிழக அரசு..!
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறையை ஓரிரு நாட்களில் தமிழக அரசு வெளியிட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நேற்று ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் தலைமைச் செயலாளர் வழிகாட்டுதலின் கீழ், வருவாய்த்துறை மூலம் இ-பாஸ் நடைமுறைகள் வெளியிடப்பட உள்ளதாகவும், இதற்காக சுற்றுலா, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து இ-பாஸ் நடைமுறைகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஊட்டி, கொடைக்கானல் செல்ல இனிமேல் இ பாஸ் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran