திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (09:32 IST)

”நாயகன் மீண்டும் வறார்..??” – மீண்டும் லைவ் வரும் நித்தி! – சீடர்கள் குஷி!

நித்யானந்தா
கடந்த சில காலமாக ஆள் அட்ரஸ் இல்லாமல் இருந்த நித்யானந்தா மீண்டும் நேரலையில் வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வைரலாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் தலைமறைவான நித்தியானந்தா அடிக்கடி சமூக வலைதளங்களில் தான் பேசும் வீடியோவை மட்டும் ஷேர் செய்து வந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக நித்தியானந்தாவின் வீடியோ எதும் வரவில்லை. அவர் இறந்துவிட்டதாக கூட பேசிக் கொள்ளப்பட்டது. பின்னர் அவர் உலக நலனுக்காக சமாதி நிலையில் இருப்பதாகவும் விரைவில் சத்சங்கத்தை தொடர்வார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜூலை 13ம் தேதியன்று குரு பூர்ணிமாவையொட்டி நித்தியானந்தா சமாதி நிலையை முடித்து நேரலையில் பேச உள்ளதாக அவரது சீடர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர். மேலும் விக்ரம் படத்தின் “நாயகன் மீண்டும் வரார்” பாடலை வைத்து எடிட் செய்தும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.