1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nilgris announce holiday to schools for rain

நீலகிரியில் கனமழை; 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Nilgris
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று நீலகிரியில் சில தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை அதிகரித்துள்ளது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் இன்று காலை முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
அடுத்த கட்டுரையில்
தொடரும் கனமழை; 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!