1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:47 IST)

20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

rain
தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அந்த 20 மாவட்டங்கள் பின்வருமாறு:
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.