1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified திங்கள், 21 நவம்பர் 2022 (13:46 IST)

மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு: வழக்கை விசாரண செய்கிறது என்ஐஏ!

auto blast
மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கை இதுவரை கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடித்ஹ்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடிகுண்டு நிபுணர்கள் இது குறித்து விசாரணை செய்தபோது இந்த சம்பவம் தீவிரவாதிகளின் சதி என்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran