வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 நவம்பர் 2022 (15:08 IST)

90ஸின் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு என்ன ஆச்சு? அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார்.

இந்நிலையில் அவர் இப்போது நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். அங்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் முக்கியப் பதவியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும்,  அது சம்மந்தமான புகைப்படங்களையும் வெளியிடவே ரசிகர்கள் பலரும் அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என ஆறுதல் வார்த்தைகளைக் கூறி வருகின்றனர்.