1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 நவம்பர் 2022 (10:35 IST)

மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்.. தீவிரவாத தாக்குதல் என அறிவிப்பு

auto blast
மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்.. தீவிரவாத தாக்குதல் என அறிவிப்பு
மங்களூரில் நேற்று ஆட்டோ வெடித்த சம்பவம் தீவிரவாதத் தாக்குதல் என அம்மாநில கர்நாடக மாநில டிஜிபி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெங்களூரில் நேற்று ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த கர்நாடக மாநில காவல்துறையினர் இது தீவிரவாத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். 
 
ஆட்டோவில் மர்மப் பொருள் வெடித்து விபத்து அல்ல என்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் சதி என்றும் கர்நாடக மாநில போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மங்களூரில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva