திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:25 IST)

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் மதுரை தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக நடந்த நிலையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நீட் தேர்வு தமிழ்நாட்டு மட்டுமல்ல நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தனக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும்  நீட் தேர்வு ரகசியம் இது தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Siva