திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (17:02 IST)

மாணவர்களின் நம்பிக்கையை குலைக்கும் உண்ணாவிரதம்: தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்..!

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரதம் மாணவர்களை நம்பிக்கையை குலைக்கும் என புதுவை மாநில துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் இன்று மதுரை தவிர தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக சென்னையில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளார். 
 
இந்த நிலையில் இந்த உண்ணாவிரதம் குறித்து புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்த போது உண்ணாவிரதம் என்ற பெயரில் மாணவர்களின் நம்பிக்கையை திமுகவினர் குலைக்கின்றனர் என்று தெரிவித்தார். 
 
நீட் தேர்வையும் மாணவர்களையும் வைத்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சி செய்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
 
Edited by Siva