இன்ஜினீயரிங் படிப்பதற்கு நீட் நுழைவுத்தேர்வா? தேசிய தொழில்நுட்ப கல்விக் குழும தலைவர்..!
மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போல என்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு போன்ற பொது நுழைவு தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று தேசிய தொழில் கல்வி குழும தலைவர் தெரிவித்துள்ளார்
சென்னையில் நடைபெற்ற சத்தியபாமா நகர் நிலை பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவில் இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தலைவர் சீதாராம் கலந்து கொண்டார்.
அப்போது மாணவர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பொறியியல் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போல் பொறியியல் படிப்பிற்கு நீட் தேர்வு நடத்த எந்த விதமான திட்டமும் தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran