உண்ணாவிரத போராட்டத்தில் அழுத உதயநிதி ஸ்டாலின்! – காரணம் இதுதான்!
சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுனரின் செயல்பாடுகளை கண்டித்தும் இன்று திமுக அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
உண்ணாவிரத போராட்டத்தில் திமுகவினரும், பொதுமக்கள் பலரும் நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் கருத்துக்களை பேசி வருகின்றனர். அதில் நீட் தேர்வால் இறந்த அனிதாவின் சகோதரரும் கலந்து கொண்டு பேசினார். அனிதா குறித்து அவர் பேசுகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K