திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2023 (14:09 IST)

மதுரையில் மட்டும் நீட் எதிர்ப்பு போராட்டம் தேதி மாற்றம்: திமுக அறிவிப்பு..!

திமுக இளைஞரணி தரப்பிலிருந்து வரும் 20ஆம் தேதி தமிழக முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில் மதுரையில் மட்டும் இந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் மாணவன் மற்றும் அவருடைய தந்தை இறந்த காரணத்தை அடுத்து நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்தப் போவதாக திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி அறிவித்தது 
 
இந்த நிலையில் அதே 20ஆம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதை அடுத்து அதிமுக கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சி மாநாடு நடத்துவதால் ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு நீட் எதிர்ப்பு போராட்டம் மதுரையில் மட்டும் 23ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திமுக இளைஞரணி மாணவர் அணி மருத்துவர் அணி அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran