நாளை 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தீபாவளிக்கு பிறகு இன்னும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு இதுவரை வெளி வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது