1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (09:31 IST)

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு: உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

இன்னும் 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. 
 
வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மையம் இன்னும் 12 மணி நேரத்தில் தோன்றும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதி குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது