சென்னையில் வெள்ளம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு !
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்துள்ள இடங்களுக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்கு உதவிட தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.