செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (09:08 IST)

விமர்சனங்கள் குறித்து கவலையில்லை... அண்ணாமலை

படகில் சென்றது தொடர்பான விமர்சனங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்று அண்ணாமலை கருத்து. 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்து நான்கு நாட்கள் ஆகியும் சில இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர். பின்னர் இது சரிசெய்யப்பட்டது.  
 
மழை சூழ்ந்துள்ள பகுதிகளை அனைத்து அரசியல் கட்சியினரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அந்த வகையில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை படகில் சென்று மக்களுக்கு தேவையானதை கேட்டறிந்தார். 
 
சென்னையில் நடந்து செல்லும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் படகில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவது போன்று படகுடன் சென்று பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 
 
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது, ன. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். 
 
மேலும் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பை கண்டறியவே தான் படகில் சென்றதாகவும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்று கூறினார்.