வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (11:42 IST)

ஃபெயிலானா உசிரா போச்சு? ஜாலியா எழுதுங்கடே! - நெட்டிசன்களின் அட்வைஸ்

இன்று முதல் தமிழக பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள சூழலில் புத்தக கடை ஒன்றில் வைக்கப்பட்ட அறிவிப்பு ட்ரெண்டாகி உள்ளது.

தமிழகத்தில் +2 பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மார்ச் 24 வரை நடைபெறும் இந்த தேர்வுகளில் பல லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் தொற்றிக் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. நன்றாக படித்த மாணவர்களும் கூட பதட்டத்தால் தேர்வு அறையில் பல விடைகளை மறந்து விடுகின்றனர்.

மேலும் தேர்வு எழுதிய பிறகு பல மாணவர்கள் ஃபெயில் ஆகிவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை முயற்சி செய்வது, ரிசல்ட் வரும்போது ஃபெயில் ஆகியிருந்தால் தற்கொலை முயற்சி செய்வது போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதற்காக தேர்வு காலங்களில் பல உளவியல் நிபுணர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெஷனரி கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு தற்சமயம் ட்ரெண்டாகியுள்ளது. அதில் “அடேய் பசங்களா..! உயிட் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு முக்கியமான விஷயமல்ல பரீட்சை. ஜாலியா எழுதுங்கடே!” என்று எழுதப்பட்டுள்ளது.

அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பலர் மாணவர்களை பதட்டமின்றி தேர்வு எழுத சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.