செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இளநிலை மருத்துவ நீட் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

இளநிலை மருத்துவர் நீட் தேர்வுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் சுறுசுறுப்பாகி உள்ளனர்
 
இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் அறிவித்துள்ளார் 
 
இந்த கலந்தாய்வு கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும்  கலந்தாய்வுக்கு கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது