வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (11:45 IST)

அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திடீரென வெளிநடப்பு செய்த வானதி ஸ்ரீனிவாசன்!

நீட்தேர்வு எதிர்ப்பை வலியுறுத்த அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொள்வார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூடிய நிலையில் பாஜக சார்பில் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவர் இந்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு வானதி ஸ்ரீனிவாசன் வெளிநடப்பு செய்தார் என்றும் அவர் வெளிநடப்பு செய்தபோதிலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.