தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் தீர்ப்பாவது தமிழக மக்களுக்கு சாதகமாக வருமா? இன்று முக்கிய உத்தரவு
- வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள்: மேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு
- அஜித் செய்த காரியம்...தமிழக அரசு அறிக்கை...
- நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலதடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
- செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் - கே. பாக்கியராஜ் ஓப்பன் டாக்
ஸ்டெர்லைட் வழக்கு: பசுமைத்தீர்ப்பாயம் அதிர்ச்சி அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் நிர்வாகம் பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரந்தது. இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த அறிக்கை வெளியானது
இந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இயற்கைக்கு முரணானது என்றும் முறையாக நோட்டீஸ் அனுப்பிய பின்னரே முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பசுமைத்தீர்ப்பாயத்தின் இந்த அறிக்கை தூத்துகுடி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது
