1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK conducting All party meeting tomorrow

பரபரப்பான சூழ்நிலையில் திமுக சார்பில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: காரணம் என்ன?

மேகதாது அணை
மேகதாது அணை சம்மந்தமாக திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருக்கிறது.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியது.
 
மேகதாதுவில் அணை கட்டுவது சம்மந்தமாக அனுப்பிய வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது சம்மந்தமாக ஆலோசிக்கவும் திமுக சார்பில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
அடுத்த கட்டுரையில்
மேகதாது் அணை விவகாரம்: நாளை அனைத்து கட்சி கூட்டம்