அஜித் செய்த காரியம்...தமிழக அரசு அறிக்கை...

ajith
VM| Last Updated: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (13:34 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர தமிழ் திரையுலகினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்ச ரூபாயும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளனர்.
 
இதுதவிர தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.4.50 லட்சம் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :