1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. National Education Program not affect in Puducherry says CM

புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரிக்கு யூஸ் இல்லை! – முதல்வர் நாராயணசாமி!

Puducherry
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கைக்கான புதிய கல்வி கொள்கை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதனால் புதுச்சேரியில் மாற்றங்கள் ஏற்படாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான கல்வி திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த திட்டம் மீண்டும் இந்தி திணிப்பை, மும்மொழி கொள்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இதனால் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியுள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ”புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. எனினும் மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
அடுத்த கட்டுரையில்
கிடைக்கிற கேப்பில் இப்படி வாரிவிடலாமா?– உதயநிதி ட்வீட்