செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (11:18 IST)

எனக்கு வாய்ப்பு கிடைக்க எனது பெற்றோரே காரணம் - நெப்போட்டிஸம் குறித்து ஸ்ருதிஹாசன்!

பாலிவுட்டில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நெப்போட்டிஸம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் இந்தியா முழுவதும் சினிமா துறையில் இருக்கும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் (நெப்போட்டிசம் ) குறித்து பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தென்னிந்திய சினிமாவிலும் இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் மற்றும் நடிகர் சாந்தணு ஆகியோர் இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நெப்போட்டிஸம் குறித்து ‘நான் திரைத்துறைக்கு வந்ததற்கு காரணம் என் பெற்றோர்தான். அவர்கள் இருவரும் இந்த துறையில் இருந்ததால் என் ஆரம்பக் கட்ட வாய்ப்புகள் வந்தன. ஆனால் பெற்றோர் பெயரை வைத்துக் கொண்டு நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது. அவரவரின் தனித்திறமைதான் அவர்களை நிலைக்கச் செய்யும்’ எனக் கூறியுள்ளார்.