வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (19:43 IST)

நானும் பாலிவுட்டில் அவமதிக்கப்பட்டுள்ளேன்: தமன்னா

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திலிருந்து நெப்போடிசம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரையுலகில் வாரிசுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலை இருப்பதாகவும் குறிப்பாக பாலிவுட்டில் நெப்போடிசம் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது 
 
இந்த நிலையில் ஏஆர் ரகுமான், ரசூல் பூக்குட்டி உள்பட ஒருசில பிரபலங்களும் பாலிவுட் திரை உலகினரால் பாதிக்கப்பட்டதாக பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகை தமன்னா இதுகுறித்து கூறிய போது நானும் பாலிவுட் திரையுலகிலனரால் பாதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் பல முறை என்னுடைய பெயர் விருது பட்டியலில் இருந்தும் தனக்கு விருது கிடைக்கவில்லை என்றும் வாரிசுகள் மட்டுமே விருதுகளை பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் 
 
ஏஆர் ரகுமான், ரசூல் பூக்குட்டியை அடுத்து தமன்னாவும் அதே போன்ற குற்றச் சாட்டை வைத்துள்ளது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது