செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (21:07 IST)

பாஜகவே இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியிருக்கும்: நாராயணன் திருப்பதி

narayan tirupathi
கடவுள்களின் மீதும் அநாகரீக, தரம் தாழ்ந்த, சட்டவிரோத செயல்களை தமிழக அரசு அனுமதிக்குமேயானால்,  பாஜகவே இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியிருக்கும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
 
கடவுள்களை ஆபாசமாக சித்தரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'பெண்களை கற்பழித்த கண்ணன் ஒரு கடவுளா' என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தியுள்ளது தமிழக காவல் துறைக்கு தெரியாதா?மதுரை காவல் துறை ஆணையரின் காதுகளில் விழவில்லையா? காணொளி இணைப்புகள் கண்களுக்கு தெரியவில்லையா?
 
இந்த கொடிய கும்பலை சேர்ந்தவர்கள் தான் சமீபத்தில் 'லூலூ' என்ற முகநூல் குழுமத்தில் அப்பாவி பெண்களை வயப்படுத்தி, மிரட்டி பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தியது என்று பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்ற பெண்மணி பகிரங்க குற்றச்சாட்டை ஆதாரங்களோடு
முன்வைத்தும், புகாரளித்தும், இது வரை  @tnpoliceoffl   இந்த மோசடி கும்பலின் மீது உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே போல் கடந்த மாதம் 'யூ டூ புரூட்டஸ்' என்ற வலைத்தளத்தில் சிவபெருமானை ஆபாசமாக, அவதூறாக பேசிய அற்ப பதரை இது வரையில் கைது செய்யாமல் இருப்பதும் 90 விழுக்காடு ஹிந்துக்கள் உள்ளார்கள் என்று ஓலமிட்ட திராவிட முன்னேற்ற கழக அரசு ஹிந்து விரோத அரசு தான் என்பதை மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணி என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட ஹிந்து விரோத செயல்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது  மதுரை காவல்துறை இதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கே களங்கத்தை உருவாக்கும் செயல்.
 
இந்த பேரணியை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹிந்து மதத்தை இழிவாக பேசியுள்ளதோடு, சில  சாதிகள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்  @SuVe4Madurai
 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  @thirumaofficial   ஆகியோரின்  வன்மத்தை விதைக்கும், மத நல்லிணக்கத்துக்கு எதிரான பேச்சுக்கு எதிராக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லையேல்,  mkstalin   அவர்கள், திராவிட முன்னேற்ற கழக அரசு ஹிந்துக்களுக்கு எதிரானது தான் என்றும், தன்  அரசு ஹிந்து கடவுள்களுக்கு எதிரானது தான் என்பதையும் ஒப்பு கொள்வதோடு, தமிழக ஹிந்து அற நிலையை துறையை விட்டு வெளியேற உத்தரவிட  வேண்டும்.மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சமூக விரோத தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க  அச்சப்படுகிறதா அல்லது வெண்சாமரம் வீசுகிறதா திராவிட முன்னேற்ற கழக அரசு என்பதை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் திராவிடர் கழகம் உள்ளிட்ட நாத்திக சமூக விரோத அமைப்புகளை தடை செய்ய வேண்டும். இனியும் ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து 
 
கடவுள்களின் மீதும் அநாகரீக, தரம் தாழ்ந்த, சட்டவிரோத செயல்களை தமிழக அரசு அனுமதிக்குமேயானால்,அமைதியை நிலைநாட்ட,மதநல்லிணக்கத்தை பேணிகாக்க சட்ட விரோத தீய சக்திகளை, மக்களின் துணைகொண்டு பாஜகவே இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியிருக்கும்.