1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (15:13 IST)

கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி! – காவலில் எடுப்பது குறித்து விசாரணை!

karthick gopinath
கோவிலை புனரமைக்கப்போவதாக பக்தர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலை புனரமைப்பதாக கூறி பக்தர்கள், பொதுமக்களிடம் பாஜக பிரமுகர் கார்த்திக் கோபிநாத் சுமார் ரூ.34 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அதை தொடர்ந்து கார்த்திக் கோபிநாத் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பூந்தமல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நாளை கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடங்க உள்ளது.