திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 1 ஜூன் 2022 (08:44 IST)

சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்: நயினார் நாகேந்திரன் பேட்டி

sasikala
சசிகலா பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். 
 
சசிகலா கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் சேர முயற்சித்து வருகிறார் என்றும் அதிமுக ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூட இந்த விஷயத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அவர் பாஜகவில் இணைந்தால் பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் புதுக்கோட்டையில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ளார் 
 
இதனையடுத்து சசிகலா பாஜகவில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்