தொடர்புடைய செய்திகள்
- கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி! – காவலில் எடுப்பது குறித்து விசாரணை!
- எஸ்.பி.ஐ வங்கி வட்டி விகிதத்தில் புதிய மாற்றம்
- காற்றின் திசை மாறுபாடு - தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை!
- பாஜகவின் வளர்ச்சி அதிமுகவிற்கு நல்லதல்ல - பொன்னையன் வார்னிங்!
- அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழகம் புறக்கணிப்பு
பாஜகவில் சசிகலா... அண்ணாமலை கூறுவது என்ன??
பாஜகவிற்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து என அண்ணாமலை பேட்டி.
சசிகலா கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் சேர முயற்சித்து வருகிறார் என்றும் அதிமுக ஆதரவாளர்கள் சிலர் இவர் பக்கம் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூட இந்த விஷயத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அவர் பாஜகவில் இணைந்தால் பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் புதுக்கோட்டையில் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவிற்கு சசிகலா வந்தால் வரவேற்போம் என நயினார் நாகேந்திரன் கூறுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவர், சசிகலா பாஜகவில் இணைவது கட்சியின் கருத்து அல்ல என்று குறிப்பிட்டார்.
